ஒற்றைத் தலைமை ஏற்க முடியாது.. சமரசரத்தை நிராகரித்த ஓபிஎஸ்.. கலக்கத்தில் இபிஎஸ்.. மீண்டும் தர்ம யுத்தம் 2.0

By Ezhilarasan BabuFirst Published Jun 18, 2022, 11:25 AM IST
Highlights

ஒற்றை தலைமை என்ற நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்பதில் பன்னீர்செல்வம் உறுதியுடன் இருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமியின் சமரசத்தை நிராகரித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

ஒற்றை தலைமை என்ற நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்பதில் பன்னீர்செல்வம் உறுதியுடன் இருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமியின் சமரசத்தை நிராகரித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதையும் மீறி  ஒற்றுமையை வலியுறுத்தி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினால் ஓபிஎஸ் தரப்பினர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஈடுபடுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தகவல் கிடைத்துள்ளதால் அவர் குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையின்கீழ் அதிமுக இயங்கி வருகிறது. இரண்டைத் தலைமையின் கீழ் இதுவரை சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக தோல்வியை சந்தித்ததால் ஒற்றைத் தலைமையே கட்சிக்கு தேவை என இபிஎஸ் ஆதரவாளர்கள் குரல் எழுப்பியுள்ளனர். இது தற்போது பூதாகரமான வெடித்துள்ளது. எனவே எதிர் வரும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி தீர்மானம் இயற்றும் முயற்சியில் அக்காட்சியின் முன்னணி நிர்வாகிகள் (இபிஎஸ் ஆதரவாளர்கள்) தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் இதுவரை ஒற்றை தலைமை குறித்து எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை, அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களே அது குறித்து பேசி வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். மொத்தத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, பன்னீர்செல்வம் தரப்பு என இரண்டாகப் பிரிந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஒற்றை தலைமையை ஏற்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம்  நேற்று முன்தினம் வெளிப்படையாகவே கூறி விட்டார். இதனால் கலக்கமடைந்த எடப்பாடி பழனிச்சாமி இந்த பிரச்சினையை பொதுக் குழுவரை கொண்டு செல்லாமல் சுமூகமாக பேசித் தீர்க்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். இதற்காகத் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் தன்னை சந்திக்க வந்தார் மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி தம்பிதுரையுடன் ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி நேற்று மதியம் பன்னீர்செல்வத்தை சென்னையில் சந்தித்தார் நம்பிதுரை, அப்போது மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், வைத்திலிங்கம், ஜேசிபி பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக புதிய பகுதியை உருவாக்கலாம், அதில் ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்ந்து நீடிக்கும், ஆனால் தலைவர் பதவியை மட்டும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் விட்டுக்கொடுக்க வேண்டும் என தம்பிதுரை வலியுறுத்தியதாக தெரிகிறது. அதாவது கட்சியின் சார்பில்  அறிவிப்பு வெளியிடுவது, அறிக்கை வெளியிடுவது போன்ற பொறுப்புகள் தலைவருக்கே இருக்கும், தலைவருக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது என தம்பிதுறை கூறியதாவும், அதை ஓபிஎஸ் வேண்டமே வேண்டாம் என புறக்கணித்து விட்டார் என கூறப்படுகிறது. நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்து கொண்ட பன்னீர்செல்வம், இது தொடர்பாக கே.கே நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினால் அங்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் கிடைத்துள்ளதால் அவர் கலக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது வரும் 23ஆம் தேதி போது கூட்டத்திலேயே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டத்தை முறியடிப்பது அல்லது தனி பொதுக்குழுவை கூட்டுவதா என்ற முடிவுகள் இன்று எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அல்லது ஏற்கனவே செய்ததுபோல தர்மயுத்தம் 2.0 ஓ பன்னீர்செல்வம் கையில் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 
 

click me!