கொரோனா வைரஸ் பரப்பியதாக சீனா அதிபர் மீது இந்தியாவில் வழக்கு பதிவு.! சீனா அதிபர் அதிர்ச்சி..!!

By T BalamurukanFirst Published Jun 11, 2020, 8:12 PM IST
Highlights

சீனாவில் உள்ள மாநிலமான வுகானில் இருந்து தோன்றியது தான் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தான் உலகம் முழுவதும் ஆக்டோபஸ் போல் பரவி உலகத்தையே முடக்கி வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பொருளாதரம் சீரழிந்து சின்னாபின்னாமாக போயிருக்கிறது. மக்கள் அனைவரும் பொருளாதாரம் இழந்து வீழ்ந்து கிடக்கிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் சீனா தான். எனவே சீன அதிபர் மீது இந்தியாவில் பீகார் மாநிலத்தில வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 சீன அதிபர் ஜி சின்பிங் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பீகார் மாநிலம் சம்பரான் மாவட்டம் பெட்டயாவில் உள்ள முதன்மை குற்றவியல் நீதிபதி முன்னிலையில், வழக்கறிஞர் முராத் அலி என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில்... "சீனாவின் வுஹான் மாகணத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கொரோனா வைரசை உலகம் முழுவதும் பரப்பியதாக சீன அதிபர் ஜி சின்பிங் மீதும்,  அதன் பரவல் குறித்த  தகவலை உலகிற்குத் தெரியாமல் மறைத்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் கிப்ரேசியஸ் மீதும் புகார் அளித்துள்ளார்.அத்துடன் அவர் தனது புகாருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடியை சாட்சியாக சேர்த்துள்ளார். ஜி சின்பிங் மற்றும் கிப்ரேசியஸ் ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 269, 270, 271, 302, 307, 500, 504 மற்றும்120பி இன் படி நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.தனது புகாருக்கு ஆதராமாக அனைத்துவகை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வந்த செய்திகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனுவானது வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!