பொறுப்பில்லாமல் தூக்கியெறியப்படும் முகக்கவசங்கள்..!! ஆபத்து வளையத்தில் துப்புரவு பணியாளர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 11, 2020, 5:19 PM IST
Highlights

இதில் முக்கியமானது முகக் கவசம் அணிவது, அதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி பெரும்பாலான மக்கள் தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ளக் முகக்கவசம்  அணிகின்றனர்.

பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய முகக்கவசங்களை பாதுகாப்பற்ற முறையில் சாலைகளில் வீசி எறிகின்றனர், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். உலகம் முழுதும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமானது முகக் கவசம் அணிவது, அதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி பெரும்பாலான மக்கள் தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ளக் முகக்கவசம் அணிகின்றனர். 

அதேசமயம் பயன்படுத்திய அந்த முகக்கவசங்களை சுகாதாரமான முறையில் அகற்றுவதில்லை, இதனால் கொரோனா மட்டுமின்றி மற்ற நோய் தொற்றுகளும் பரவும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆங்காங்கே சாலைகளிலும், பொது இடங்களிலும் வீசி எறிகின்றனர். இவ்வாறு வீசப்படும் முகக்கவசங்களை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தும் நிலை உள்ளது. இதனால் துப்புரவு தொழிலாளர்களுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. 

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர், அங்கு வந்து செல்லும் மக்கள்  பயன்படுத்தும் முக கவசங்களை போடுவதற்கு பிரத்தியேகமான குப்பைத் தொட்டிகள் ஏதுமில்லை, எனவே ஆங்காங்கே  கழற்றி தூக்கி எறியும் நிலை உள்ளது. இதனால் அங்கு பார்க்கும் இடத்திலெல்லாம் பயன்படுத்திய முகக்கவசங்கள் கிடக்கின்றன. இதேநிலை பல்வேறு நகர் பகுதிகளிலும் காணப்படுகிறது, குறிப்பாக மருத்துவமனை வளாகங்களிலும் இந்த நிலையே உள்ளது, அரசு அலுவலகங்களுக்கு வரும் இடங்களில் பயன்படுத்திய முகக்கவசங்கள், கையுறைகள் போடுவதற்கு தேவையான குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

click me!