கொரோனாவில் ஒரு ஆறுதலான விஷயம் மக்களே..!! இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லையாம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 11, 2020, 7:06 PM IST
Highlights

இருப்பினும், கொரோனா வைரஸ் குறித்து நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். வயதானவர்கள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஆபத்து மிக அதிகம் என்றும் கொரோனா விவகாரத்தில் மாநிலங்களின் விழிப்புணர்வைக் குறைக்கப்பட கூடாது என்றும் ஐ.சி.எம்.ஆர். எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் கொரோனா சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டதோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் மற்றும் ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா மற்றும் என்.ஐ.டி.ஐ. ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் சில முக்கியமான தகவல்களை வழங்கினர். கொரோனா வைரஸின் சரியான நிலைகுறித்து அறிய நாட்டில் செரோ என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர். இந்த ஆய்வில் பல ஆறுதலான விஷயங்கள் வெளிவந்துள்ளன. நாட்டில் தொற்றுநோய்களின் நிலையை அறிய இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
இந்த செரோ கணக்கெடுப்பு ஏப்ரல் மாத இறுதியில் நாடு முழுவதும் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டது.

அதன்படி, நாட்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 
இது தவிர, தற்போது நாட்டில் சமூக பரவல் நிலைமை ஏற்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.83 மாவட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 0.73 சதவீதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஐ.சி.எம்.ஆர் படி, கிராமங்களை விட நகரங்களில் அதிகமான பாதிப்புகள் காணப்படுகின்றன. அதேபோல் நாட்டில் குணமடைந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 49.21 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இறப்பு விகிதம் மற்ற நாடுகளை விட மிகக் குறைவு.மே 15 அன்று நாட்டில் இறப்பு விகிதம் 3.3 சதவீதமாக இருந்த நிலையில் இப்போது அது 2.8 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல் ஊரடங்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதில் ஊரடங்கு பயனுள்ளதாக இருந்ததும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், கொரோனா வைரஸ் குறித்து நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். வயதானவர்கள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஆபத்து மிக அதிகம் என்றும் கொரோனா விவகாரத்தில் மாநிலங்களின் விழிப்புணர்வைக் குறைக்கப்பட கூடாது என்றும் ஐ.சி.எம்.ஆர். எச்சரித்துள்ளது. ஒரு நாளில் இரண்டு லட்சம் சோதனைகள் செய்வதற்கான திறன் மத்திய அரசிடம்  உள்ளது என்றும்,  ஐ.சி.எம்.ஆர் 
தற்போது, ​​நாட்டில் சுமார் ஒன்றரை மில்லியன் சோதனைகள் செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். சுகாதார அமைச்சகம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இறந்தவரின் தரவுகளை தெரிவிக்கிறது.மேலும் செரோ சர்வே என்றால் என்ன என்பது குறித்த விளக்கிய அவர்கள், சாதாரண மக்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, அது IgG ஆன்டிபாடிகள் குறித்து சோதிக்கப்படுகிறது. ஒரு நபர் IgG நேர்மறை என்று கண்டறியப்பட்டால், அவர் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தம். எனவே இதன் அடிப்படையில் சமூக பரவல் ஏற்பட்டதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

 

click me!