சண்டை பிறகு வைத்துக் கொள்ளலாம்..!! இப்போ கொரோனாவை எதிர்ப்போம் , அமெரிக்காவை அழைத்த ஜி ஜின் பிங்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 27, 2020, 12:49 PM IST
Highlights

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங் ,  உலகத்தை அழிக்கும் கொடிய கொரோனா வைரஸ் எதிர்ந்து அமெரிக்கா சீனா இணைந்து போரிட வேண்டும் என கூறியுள்ளார். 

கொரோனா வைரசை விரட்ட இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென சீன அதிபர் ஜீ ஜின்பிங் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ,  கொரோனா  வைரசுக்கு  காரணம் சீனாதான் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது,  இந்நிலையில் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.  சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .150க்கும் மேற்பட்ட நாடுகள் வைரஸால்  கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன .  வரலாறு காணாத மனித பேரிழப்பை உலகம் சந்தித்து வருகிறது .  வைரசுக்கு அமெரிக்கா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . 

 

இதுவரையில் அமெரிக்காவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து தாண்டியுள்ளது ,  இந்நிலையில் அமெரிக்காவில் சுமார் 1300 பேர் வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் கடுமையான வைரஸ் பாதிப்புக்குள்ளான  சீனா,  இத்தாலியையும் தாண்டி வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது.  நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் புதிய வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் .  இந்நிலையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் சுமார் 16 ஆயிரம் பேருக்கு வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதனால் செய்வதறியாது அமெரிக்க திகைத்து வருகிறது .  இந்நிலையில் தன்னுடைய மொத்த கோபதாபத்தையும் அமெரிக்கா சீனாவின் மீது உமிழ்ந்து வருகிறது .  உலகம் இந்த நிலைமைக்கு சென்றதற்கு சீனா தான் காரணம் , இது அத்தனைக்கும்  சீனா விலை கொடுத்தே ஆகவேண்டும் எனவும் அமெரிக்கா சீனா மீது கோபக்கணைகளை வீசி வருகிறது. 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங் ,  உலகத்தை அழிக்கும் கொடிய கொரோனா வைரஸ் எதிர்ந்து அமெரிக்கா சீனா இணைந்து போரிட வேண்டும் என கூறியுள்ளார்.  சீனாவின் மீது வைக்கும் குற்றச்சாட்டை கைவிட்டு கொரோனாவை  எதிர்த்து போரிட கைகோர்ப்போம் என சீன எதிர்ப்பாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  அதேபோல் கரோனா வைரஸை சீனா எதிர்கொண்ட விதம் குறித்தும் கையாண்ட மருத்து முறைகள் குறித்தும்  முழு அனுபவத்தையும் அமெரிக்காவிடம் பகிர்ந்துகொள்ள சீனா விரும்புகிறது எனவும்அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார் .  அமெரிக்காவில் வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்கா சீனா இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து சீனா அதிபர் அமெரிக்காவிற்கு இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது . 
 

click me!