பேரறிவாளனை ஆரத்தழுவி ஏதோ சாதித்ததை போல காட்டிக் கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. அண்ணாமலை கொதிப்பு.

By Ezhilarasan BabuFirst Published May 19, 2022, 7:58 PM IST
Highlights

முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்தில் பேரறிவாளனை ஆரத்தழுவி ஏதோ சாதித்ததை போல காட்டிக் கொள்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்தில் பேரறிவாளனை ஆரத்தழுவி ஏதோ சாதித்ததை போல காட்டிக் கொள்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ராஜிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரும் குற்றவாளிகளே என்றும் அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் கொண்டாட ஆயிரம் பேர் உள்ளனர் இவரின் விடுதலையை கொண்டாட வேண்டாம் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதுகுறித்து பலரும் பல வகைகளில் கருத்து கூறி வருகின்றனர். திராவிட இயக்கங்கள் மற்றும்  காங்கிரஸ் கட்சியை தவிர்த்த மற்ற திமுக கூட்டணி கட்சிகள் பேரறிவாளன் விடுதலையை வரவேற்று மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 1991 மே 21 மிகவும் துயரமான நாள், அன்று இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு விபத்தில் தமிழக மண்ணில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து 20 நாட்கள் கழித்து சிபிஐ அதிகாரிகளால் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். பின்னர் அதில் தொடர்புடைய 26 பேருக்கு பூந்தமல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. அதன் பிறகு அதிலிருந்து ஒரு சில விடுதலை செய்யப்பட்டனர்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் நளினி உள்ளிட்ட ஏழு பேருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. தற்போது பேரறிவாளனை விடுதலை செய்ததன் மூலம் ஒரு வித்தியாசமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என்றும், ஆனால் ஒரு சரித்திரத்தை எப்போதும் நாம் மறக்கக்கூடாது என்றும், நம் மண்ணில் நடந்ததை மறக்க முடியாது என்றும் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் குற்றவாளிகள் தான் வேண்டும் அவர் விமர்சித்தார். இந்த விஷயத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்றும், திமுக கொடுத்த ஆதரவை அது திரும்ப பெறுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பேரறிவாளன் விடுதலை ஆனதிலிருந்து தமிழக முதல்வர் நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமாக உள்ளது என்றும், நிரபராதியை விடுதலை செய்ததை கொண்டாடுவது போல உள்ளது என்றும், உண்மையிலேயே அரசியலமைப்பின் மீது எடுத்த  சத்திய பிரமாணத்தை முதல்வர் மீறுகிறாரா என சந்தேகம் எழுவதாகவும், தீர்ப்பில் எந்த இடத்திலும் அவர் நிரபராதி என உச்சநீதிமன்றம் கூறவில்லை என்றும் அண்ணாமலை காட்டமாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் முதல்வர் விமானநிலையத்தில் பேரறிவாளனை ஆரத்தழுவி ஏதோ சாதனை செய்தது போல காட்டிக் கொள்கிறார், ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் தான் அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல,  அதிமுக பேரறிவாளனின் விடுதலையை கொண்டாட வேண்டாம் என அண்ணாமலை கோரிக்கை வைத்தார். திமுகவை போல அதிமுக பேரறிவாளனை ஆரத்தழுவி கட்டிப்பிடித்து முத்தமிட்டு போராளிகள் எனக்கூறி வரவேற்கவில்லை என்றும், அதிமுகவை பொறுத்தவரை ஏழு பேரும் குற்றவாளிகள் தான் என்றும் அவர் கூறினார். பேரறிவாளன் சிறையில் இருந்தபோது நடத்தை, பரோலில் வெளி வந்தபோது நடத்தை, கல்வி காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார் என்றும், எஞ்சிய ஆறு பேருக்கும் இது நேரடியாக பொருந்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!