அடுத்த 100 நாட்களும் மிக முக்கியமானவை... ஓய்வின்றி உழைப்போம்.! இந்தியாவை வெற்றி பெற செய்வோம்- ஸ்டாலின் சூளுரை

By Ajmal Khan  |  First Published Feb 20, 2024, 6:28 AM IST

நாடாளுமன்ற தேர்தல்  வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; INDIA-வை வெற்றி பெறச் செய்வோம் என கூறியுள்ளார். 


தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணியை வலுப்படுத்த அரசியல் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்துவரை ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளோடு முதல் கட்ட தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது.

Tap to resize

Latest Videos

இதனிடையே திமுக சார்பில்  மூன்று நாட்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை கூட்டம் நடைபெற்றது.  .உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த  கூட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக பேச்சாளர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். 

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’

இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள்!

நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள்!

வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும்… pic.twitter.com/0twFKsyWMP

— M.K.Stalin (@mkstalin)

 

வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும் பாராட்டுகள்! நன்றி! நாடாளுமன்ற தேர்தல்  வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; INDIA-வை வெற்றி பெறச் செய்வோம் என கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் பூதாகரமாக வெடித்த உட்கட்சி பூசல்; ஒன்றிய செயலாளருக்கு எதிராக எடப்பாடி அதிரடி

click me!