இந்த முறை தூத்துக்குடி தொகுதியில் எம்.பி. கனிமொழியை அதிமுக நிச்சயம் தோற்கடிக்கும் - கடம்பூர் ராஜூ

By Velmurugan sFirst Published Feb 19, 2024, 4:07 PM IST
Highlights

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை கட்டாயம் எம்.பி. கனிமொழியை எதிர்த்து அதிமுக தான் போட்டியிடும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அமுதசுரபி  அன்னதானம்  மையம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓபிஎஸ் ஏமாற்றத்தின் விளிம்பில் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்.

திமுகவினை எதிற்கும்  ஆக்கப்பூர்வமான கட்சி அதிமுக மட்டுமே. சட்டமன்றத்தில் இருக்கை மாற்றப்பட்டதால் விரக்தியில் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ், அதிமுக, திமுகவின் ஊதுகோலாக செயல்படுவதாக கூறியுள்ளார். அதிமுகவிற்கு பதிலடி கொடுக்க ஒரு இயக்கம்  தமிழகத்தில் இதுவரை தோன்றவில்லை. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் நடிகர் கமல்ஹாசன். திமுகவுடன் கூட்டணி சேர்வதற்காக ஒரு இடத்தில் அதிமுக பற்றி பேசி உள்ளார். அவருடைய கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள அவசியமில்லை.

“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு

திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. பாஜக உடன் கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. திமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகள் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இன்னும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. 2 முறை தேர்தலை இணைந்து சந்தித்தவர்கள் இடையே இன்னும் தொகுதி பங்கீடு நடைபெறவில்லை என்றால் அங்கு பிரச்சனை இருப்பதாக தான் தெரிகிறது.

திமுக கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டு வெளியேறுபவர்கள் எங்களுடன் கூட்டணியில் சேரலாம். அப்படி இல்லை என்றால் தனித்துப் போட்டியிடலாம். அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெற்ற பிறகு அது வெளிச்சத்திற்கு வரும். திமுகவுடன் மதிமுக இணைந்து விட்டதாகத்தான் கருதுகிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட திமுக உதயசூரியன் சின்னத்தில் தான் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் பூதாகரமாக வெடித்த உட்கட்சி பூசல்; ஒன்றிய செயலாளருக்கு எதிராக எடப்பாடி அதிரடி

மதிமுகவை இணைந்து விட்ட திமுகவாக தான் மக்கள் பார்க்கின்றனர். மதிமுகவை தனிக்கட்சியாக பார்க்கவில்லை. அதைத்தான் துரை வைகோ வெளிப்படையாக சொல்லி உள்ளார். தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு எவ்வித பயன் இல்லை என்பதால் ஜெயலலிதா நாடாளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டார். சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தனித்து நின்று ஆட்சியை பிடித்தது. அந்த வழியில் தான் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். அதிமுகவைத் தேடி கூட்டணி கட்சிகள் வரும்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்பியை எதிர்த்து அதிமுக வெற்றி வேட்பாளர் தான் நிறுத்தப்படுகிறார். கூட்டணிக்கு ஒதுக்க வாய்ப்பில்லை. அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும். தமிழகமே திரும்பி பார்க்கும் தொகுதியாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி இருக்கும். கடந்த முறை தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை அதிமுக, கூட்டணியில் இருந்த பாஜகவிற்கு ஒதுக்கியது.  கனிமொழியை எதிர்த்து தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் வரும் தேர்தலில் கனிமொழி எம்பியை எதிர்த்து அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என தெரிவித்துள்ளார்.

click me!