நாடாளுமன்ற தேர்தலுக்காக ஆளுநர் எங்களுக்காக ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். தற்போது அதில் அமலாக்கத்துறை சேர்ந்து விட்டது. எனவே தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்
அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூரில் நடைபெறவுள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்பதற்காக எதிர்கட்சிகள் ஒன்றிணைத்து பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருசில முடிவுகள் எடுத்தோம். அதனை தொடர்ந்து இன்று மற்றும் நாளை ஆகிய இரணடு நாட்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது. 24 எதிர்கட்சிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
undefined
பாஜகவிற்கு எரிச்சல்
பீகாரை தொடர்ந்து பெங்களூரில் கூட்டப்படும் கூட்டம், இதனால் மத்திய பாஜக ஆட்சிக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடு தான் அமலாக்கத்துறையை ஏவி விடப்பட்டுள்ளது. வட மாநிலத்தில் செய்த பணியை தற்போது தமிழகத்தில் தொடங்கியுள்ளனர். இதனைப்பற்றி கவலைப்படவில்லை. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தப்படுகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தொடர்ப்பட்ட வழக்கு புணையப்பட்ட வழக்கு, 13 ஆண்டு காலத்திற்பு முன்பு போடப்பட்ட வழக்கு. தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது. அப்போது எல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமலாக்கத்துறை சோதனையை சந்திக்க தயார்
ஏற்கனவே பொன்முடி மீது தொடரப்பட்ட இரண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பார். எனவே இதற்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதில் வழங்க தயாராக உள்ளனர், பீகார், கர்நாடகவை தொடர்ந்து பல மாநிலங்களில் நடைபெற உள்ள கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் தந்திரமே அமலாக்கத்துறை சோதனை தவிர வேறு இல்லை. இதனை எதிர்கட்சியாக உள்ள நாங்கள் சந்தித்த தயார். நாடாளுமன்ற தேர்தலுக்காக ஆளுநர் எங்களுக்காக ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.
இந்தியாவிற்கே ஆபத்து
தற்போது அதில் அமலாக்கத்துறை சேர்ந்து விட்டது. எனவே தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக உள்ளது. அமலாக்கத்துறை சோதனை திசை திருப்பும் நாடகம், இந்த சோதனை பற்றி உங்களுக்கே தெரியும், பெங்களூரில் காவிரி விவகாரம் குறித்து பேசுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், காவிரி விவகாரத்தில் கருணாநிதி முடிவெடுத்த பாதையில் பயணிப்பதாக கூறினார். பெங்களூர் கூட்டம் மத்திய பா.ஜ.க அரசை அப்புறப்படுத்த நடைபெறும் கூட்டம். காவிரிக்காக கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. காவிரியை விட இந்தியாவுக்கே ஆபத்து வந்துள்ளது. அதில் இருந்து காப்பாற்ற கூட்டப்பட்ட கூட்டம் என கூறினார்.
இதையும் படியுங்கள்