
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதால் அதை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கக்கூடாது என திமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், சேலம் உருக்காலையை தனியார்மயமாக்ககூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழகத்தின் முக்கியமான தொழிற்சாலைகளில் ஒன்றான சேலம் உருக்காலையை நம்பி உள்ள 2000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அதை தனியார் மயமாக்கக்கூடாது. சர்வதேச அளவில் டெண்டர் கோரும் முயற்சியை கைவிட வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.