களத்தில் குதித்த முதல்வர் பழனிசாமி..! மழை பாதிப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு..!

First Published Nov 5, 2017, 1:12 PM IST
Highlights
chief minister palanisamy review in rain affected areas


கனமழை பாதிப்புகள் குறித்தும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி நேரில் செய்துவருகிறார்.

இன்று காலை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கூடுதலாக 200 நடமாடும் மருத்துவ முகாம்களை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

அதன்பிறகு சென்னை கொடுங்கையூர் பகுதியில் லிங்க் கால்வாயில் அடைப்புகள் அகற்றப்படும் பணியை நேரில் ஆய்வு செய்தார். கால்வாய்களில் அடைப்புகள் இருப்பதால் மழைநீர் ஓடமுடியாமல் தேங்குவதால் குடியிருப்புப் பகுதிக்குள் புகும் நிலை உள்ளது.

அதை தடுக்கும் வகையில் பல்வேறு கால்வாய்களில் அடைப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொடுங்கையூர் லிங்க் கால்வாயில் ஜேசிபி எந்திரம் மூலம் அடைப்புகள் அகற்றப்படும் பணியை முதல்வர் பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

முதல்வருடன் அமைச்சர்கள் உதயகுமார், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களும் உடனிருந்தனர். 

இதையடுத்து ரெட்டேரி, சிட்லபாக்கம், சேலையூர், முடிச்சூர் ஆகிய மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

click me!