மக்களுக்கு ஒன்னுண்ணா... கேப்டன் வந்துடுவாரு..! மாட்டுவண்டியில் ஏறி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்..!

 
Published : Nov 05, 2017, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
மக்களுக்கு ஒன்னுண்ணா... கேப்டன் வந்துடுவாரு..! மாட்டுவண்டியில் ஏறி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்..!

சுருக்கம்

dmdk protest in udumalai

ஆணைமலை - நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய கொங்கு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையிலான ஆணைமலை நல்லாறு அணை கட்டும் திட்டம் 60 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கொங்கு மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ச்சியாக குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது கொங்கு மண்டல விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. 

இந்நிலையில், ஆணைமலை நல்லாறு அணை கட்டும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆர்ப்பாட்டத்தின்போது, ஏரிப்பாளையத்தில் இருந்து உடுமலைக்கு விஜயகாந்த் மாட்டுவண்டியில் பயணித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகளும் தேமுதிகவினரும் கலந்துகொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!