
2 மாதத்தில் பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழையின் அளவில் 72% மழை ஐந்தே நாட்களில் பெய்தபோதிலும் அரசு தயார் நிலையில் இருந்ததால் சென்னையில் பாதிப்பு ஏற்படவில்லை என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, 2 மாதங்களில் 79 செமீ பருவம்ழை பெய்ய வேண்டும். ஆனால் சென்னையில் கடந்த 5 நாட்களில் 56 செமீ மழை பெய்துவிட்டது. அதாவது பருவமழையின் அளவில் 72% மழை கடந்த 5 நாட்களில் பெய்துவிட்டது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டதால் சென்னையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
சென்னை புறநகர்ப்பகுதிகளான காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட முடிச்சூர் உள்ளிட்ட தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதிக குதிரைதிறன் கொண்ட மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.