மீனவர்கள் பிரச்சனையை கையில் எடுத்த டிடிவி தினகரன் - ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் சரவெடி பேச்சு...! 

 
Published : Dec 10, 2017, 08:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
மீனவர்கள் பிரச்சனையை கையில் எடுத்த டிடிவி தினகரன் - ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் சரவெடி பேச்சு...! 

சுருக்கம்

Chief Minister Palanisamy did not have the courage to meet the people of Kumari district affected by the storm TTV Thinakaran said.

புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களை சந்திக்க முதலமைச்சர் பழனிசாமிக்கு தைரியமில்லை என டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகி புயலால் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டமே தண்ணீரில் தத்தளித்தது. மேலும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் மாயமாயினர். 

புயலால் பல்வேறு மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்களும் வெளியாகியது. இதனால் அவரகளை மீட்க தமிழக அரசு கப்பல் படையையும் கடலோர காவல் படையையும் களமிறக்கியுள்ளது. 

ஆனால் ஆழ்கடல் பகுதியில் காணாமல் போன மீனவர்களை கரை பகுதியிலேயே தேடுகின்றனர் என கூறி மீனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து தங்களை சந்திக்க வேண்டும் என கூறி ஏராளமான மீனவர்கள் 15 க்கும் மேலான நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என ஐஓசி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட தினகரன் கூறியுள்ளார்.
  
மேலும், புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களை சந்திக்க முதலமைச்சர் பழனிசாமிக்கு தைரியமில்லை என டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!
அமைச்சரின் இலாகா தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை..! ஊராட்சி செயலாளர் பணியில் மோசடி இல்லை..! அடித்துச் சொல்லும் அதிகாரிகள்..!