ஆர்.கே.நகரில் லட்சம் லட்சமாய் சிக்கும் பணம்..! - இதுவரை எவ்வளவு தெரியுமா?

 
Published : Dec 10, 2017, 07:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
ஆர்.கே.நகரில் லட்சம் லட்சமாய் சிக்கும் பணம்..! - இதுவரை எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

Lakhs of rupees in RKNagar

ஆர்.கே.நகரில் நடைபெற்ற வாகன சோதனையில் இதுவரை ரூ.5.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா மறைவையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தலை  அறிவித்தது. அதிமுக இரண்டாக உடைந்தது.  ஓபிஎஸ் தலைமையில் பிரிந்து சென்ற அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக போட்டியிட்டார்.

அதிமுக அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். இரு அணிகளும் போட்டியிட்ட அந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆனால் வாக்காளர்களுக்கு வரலாறு காணாத அளவுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து இடைத் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.

தற்போது 7 மாதங்களுக்கு பிறகு அங்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் –ஓபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுசூதனனே மீண்டும் அந்த அணி சார்பில் களத்தில் இறங்கியுள்ளார்.

டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். எதற்காக கடந்த முறை இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதோ அதே பிரச்சனை தற்போது மீண்டும் தலைதுதூக்கியுள்ளது.

மீண்டும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை தடுக்க தனிக்குழு அமைத்து ஆர்.கே.நகர் பகுதியில் தீவிர சோதனை வேட்டை நடத்தி வருகிறது. 

இதில், ஆர்.கே.நகரில் நடைபெற்ற வாகன சோதனையில் இதுவரை ரூ.5.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 148 புகார்களில் 142 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!