முதல்வர் மு.க.ஸ்டாலினி அறிவிப்பு... மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆளுநர்..!

Published : Sep 11, 2021, 04:48 PM IST
முதல்வர் மு.க.ஸ்டாலினி அறிவிப்பு... மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆளுநர்..!

சுருக்கம்

பாரதியின் கருத்துகள் அனைத்தும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் பாரதியின் அன்பர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதாக மணிப்பூர் ஆளுநர் இல.கணே சன் தெரிவித்துள்ளார்.

சென்னை, காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பாரதியாரின் நினைவு நாளான இன்று, மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவில்லத்தில் புகைப்படக் கண்காட்சியை மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதியின் கருத்துகள் அனைத்தும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார். தமிழகத்தின் புதிய ஆளுநர் குறித்த கேள்வி கேட்ட போது, நான் இப்போது மணிப்பூர் ஆளுநர் எனத் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!