Breakingnews:அரசியலில் திடீர் திருப்பம்... முதல்வர் பதவியை ராஜினா செய்தார் விஜய் ரூபானி..!

Published : Sep 11, 2021, 03:41 PM ISTUpdated : Sep 11, 2021, 03:45 PM IST
Breakingnews:அரசியலில் திடீர் திருப்பம்... முதல்வர் பதவியை ராஜினா செய்தார் விஜய் ரூபானி..!

சுருக்கம்

குஜராத் அரசியலில் திடீர் திருப்பமாக முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியினை ராஜினாமா செய்தார்

குஜராத் அரசியலில் திடீர் திருப்பமாக முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியினை ராஜினாமா செய்தார்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டசபைத் தேர்தல்  நடைபெற உள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சற்று முன் விஜய் ரூபானி குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

ரூபானியின் ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விஜய் ரூபானி சமீபத்திய மாதங்களில் பதவி விலகும் நான்காவது பாஜக முதல்வர். ஜூலை மாதம் கர்நாடக முதல்வர் பதவியை பி.எஸ்.எடியூரப்பா ராஜினாமா செய்தார், உத்தரகாண்டில், திரிவேந்திர ராவத்தை மாற்றிய நான்கு மாதங்களில் தீரத் சிங் ராவத் விலகினார்.

காந்திநகரில் ஆளுநரை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ரூபானி, "நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சி எனக்கு கொடுக்கும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்றுவேன்," என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த முறையும் விஜய் ரூபானியே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்பது யார் என்பது இன்று மாலை தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் என்ன காரணத்துக்காக ராஜினாமா செய்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும் டெல்லியின் உத்தரவின் பெயரிலே ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அதிமுகவில் இணைக்கிறார் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி..! தவெகவில் சேர கேட் போட்ட பிடிஆர் டேப் மேட்டர்..!
எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!