ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை - கடுப்பான எடப்பாடி பழனிசாமி !

By Raghupati R  |  First Published Jul 16, 2022, 8:10 PM IST

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் போட்ட ட்வீட் ஒன்று அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


திமுகவின் கைக்கூலியாக பன்னீர்செல்வம் செயல்படுகிறார். எங்களின் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. மு.க ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக குற்றஞ்சாட்டினார்.

Tap to resize

Latest Videos

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னால் திமுகவினர் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் போட்ட ட்வீட் ஒன்று அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட நிலையில், முதல்வர் விரைந்து நலம்பெற வாழ்த்தினார் ஓ.பன்னீர்செல்வம். 

மேலும் செய்திகளுக்கு..உதயகுமார் ஊழல் பட்டியல் ரெடி.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஓகேவா ? மிரட்டும் கோவை செல்வராஜ்

தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு. அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்.

— M.K.Stalin (@mkstalin)

இந்நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவரும் விரைந்து நலம்பெற வாழ்த்தியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு. ஓ.பன்னீர்செல்வம்  அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்’ என்று கூறியுள்ளார்.

திமுகவின் கைக்கூலியாக பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பொதுக்குழுவில் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் ஓ. பன்னீர்செல்வத்துக்கு  திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் உதவுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ்சின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி  பழனிசாமி தரப்பினர் கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு..இது ஆன்மீக ஆட்சியா? திராவிட மாடல் ஆட்சியா ? கடுப்பான தர்மபுரி எம்.பி - வைரல் வீடியோ!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் எனும் பதவி காலாவாதி ஆகிவிட்டதாகக் கூறி வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை மொத்தமாக நீக்கி, பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளைக் கொண்டு வந்துள்ளனர்.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பன்னீர்செல்வத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவருக்கு நலம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், தன் சொந்த கட்சியை சேர்ந்த அமைச்சர் நாசருக்கு வாழ்த்து சொல்லவில்லையே என்று புது சர்ச்சை எழுந்துள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே.. இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு ஷாக் !

click me!