சந்திர சேகர் ராவ் இந்த கீழ்த்தரமான வேலை செய்யலாமா.?? பாஜவை பார்த்து பயமா..KCR ஜ போட்டு பொளக்கும் அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Jul 2, 2022, 2:13 PM IST
Highlights

பாஜகவால் தனது மகன் முதல்வர் ஆகவில்லை என்ற ஏமாற்றத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் கே.சி.ஆர் வரவேற்கவில்லை என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி விமர்சித்துள்ளார்.

பாஜகவால் தனது மகன் முதல்வர் ஆகவில்லை என்ற ஏமாற்றத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் கே.சி.ஆர் வரவேற்கவில்லை என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி விமர்சித்துள்ளார். தெலுங்கானாவில் பாஜக வளர்ந்து வருவதால் தனது கட்சி பலமிழந்து விடும் என்ற அச்சத்தில் அவர் இப்படி நடந்து கொள்வதாகவும்  கிஷன் ரெட்டி விமர்சித்துள்ளார்.

வட மாநிலங்களைப் போல தென் மாநிலங்களிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்த வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பல முறை முயற்சித்தும் கேரளா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதன் வியூகம் எடுபடவில்லை, கர்நாடகத்தில் எடியூரப்பாவின் முயற்சியால் அங்கு பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது, இதேபோல தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களான ஆந்திரா தெலுங்கானாவில் பாஜகவின் திட்டம் ஓரளவுக்கு பலிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அந்த இரு மாநிலங்களிலும் தனது முழு கவனத்தையும் செலுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஆந்திராவை பொருத்தவரையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பாஜகவின் கூட்டணிக் கட்சியாகவே பாவித்து வருகிறது.

இதையும் படியுங்கள்: தெலுங்கானாவை தட்டி தூக்கப் போகும் பாஜக.. ஹைதராபாத்தில் 2 நாள் முகாமிடும் மோடி.. முழு விவரம் உள்ளே.

ஆனால் தெலுங்கானா  டிஆர்எஸ் கட்சி தொடர்ந்து பாஜகவுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜகவுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்து வருகிறார். இதன் விளைவாக பிரதமர் மோடி இன்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வருகைதர உள்ள நிலையில் அவரை வரவேற்பதில் புறக்கணித்துள்ளார். இதுவரை பிரதமர் மோடியை மூன்று முறை அவர் புறக்கணித்துள்ளார். இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: பிரதமரை மூன்றாவது முறையாக அசிங்கப்படுத்திய முதல்வர்..கொஞ்சம் கூட நாகரிகமில்லாத கேசிஆர்..

ஒரு நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வரும்போது அம்மாநில முதலமைச்சர் அவரை வரவேற்க வேண்டும் என்பது மரபு,  ஆனால் அதையெல்லாம் மீறும் வகையில் தொடர்ந்து சந்திரசேகர் ராவ் நடந்துவருவது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்தவர்கள் சந்திரசேகரராவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமரை வரவேற்பதை புறக்கணித்துள்ள அவரை அம்மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். தனது மகன் முதலமைச்சர் ஆகாததால் ஏமாற்றமடைந்துள்ள கேசிஆர் பிரதமரை வரவேற்கவில்லை, எதிர்காலத்திலும் பாஜகவால் தனது மகன் முதலமைச்சராக முடியாது என்ற அச்சத்தில் கேசிஆர் இருந்து வருகிறார், பாஜக தெலுங்கானாவில் செல்வாக்கு பெற்று வரும் நிலையில், அது தனது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற அச்சத்திலும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்ற பயத்தில் கேசிஆர் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மக்கள் பணத்தில் ஹைதராபாத்தில் பாஜகவுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டிருக்கிறது, இது கீழ்த்தரமான அரசியல் என்றும் அவர் ஆவேசம் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் அரசியல் கூட்டம் நடக்கும்போது மற்றொரு கட்சியினர் இப்படி செய்வது மிகுந்த வருத்தமளிக்கிறது என்றும், முதலமைச்சர் என்ற தகுதியை மீறி  கேசிஆர் செய்வது ஒரு கீழ்த்தரமான அரசியல் என்றும் அவர் ஆவேசம் தெரிவித்துள்ளார். மேலும் டிஆர்எஸ் ஐஎம்எம் கட்சியுடன் சேர்ந்து குடும்ப அரசியல் செய்து வருகிறது என தெரிவித்த அவர், ஒருபோதும் பாஜக குடும்ப அரசியல் செய்யாது, ஜனநாயக வழியில் செயல்படும் எனக் கூறினார்.

தற்போது பாஜக செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்த அவர், கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட திட்டம் இருந்ததாகவும். ஆனால் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் கழித்து இது நடைபெறுகிறது என கிஷன் ரெட்டி கூறினார். இந்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறுவது நல்ல வளர்ச்சி என்றும், மாநிலத்திற்கு கிடைத்த வரம் என்றும் அவர் கூறியுள்ளார். இதே நேரத்தில் நடிகை குஷ்பு இந்த ஆண்டு தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் கூறியுள்ளார். பாஜக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். 
 

click me!