எடப்பாடி பழனிசாமி அரசால் நாட்டிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது.. முதல்வரை புகழ்ந்து தள்ளிய ஆளுநர்..!

By vinoth kumarFirst Published Feb 2, 2021, 12:46 PM IST
Highlights

டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியதால் முதல்வர் பழனிசாமி காவிரி காப்பாளன்' பட்டத்திற்கு பொருத்தமானவர் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார். 

டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியதால் முதல்வர் பழனிசாமி காவிரி காப்பாளன்' பட்டத்திற்கு பொருத்தமானவர் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடரை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளுடன் ஆளுநர் உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:


* மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு

*  கர்நாடக அரசின் மேகதாது திட்டத்தை நிராகரிக்க மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறோம். 

*  பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணைகளை கட்ட கேரளாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. 

*  காவிரி குண்டாறு திட்டத்தின் முதல்கட்டமாக காவிரி தெற்கு வெள்ளாறு இணைப்பு பணி விரைவில் துவங்கும்.

*  பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு பொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறிகள் தெரிகின்றன.

*  நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகளுக்கான ரூ.5,264 கோடி நிதியை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.

*  இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழக அரசு உறுதி.

* கேரள அரசுடன் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தையில், நதிநீர் பங்கீடு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

*  கொரோனாவை எதிர்கொள்ள அரசு இயந்திரங்களை திறம்பட ஒருங்கிணைத்த பெருமை முதல்வரையே சாரும்.

*  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி.

*  கொரோனா தடுப்பில் தமிழக காவல்துறை சிறப்பாக பணியாற்றியுள்ளது.

*  நாட்டிலேயே பிரத்யேகமாக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை கையாண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு.

*  தமிழகத்தை நாட்டிலேயே தலைசிறந்த மாநிலம் ஆக்கும் இலக்கினை அடைவதில் அரசு வெற்றி நடைப்போடுகிறது.

*  பொதுமக்கள், தமிழக அரசின் சேவைகளை பெற 1100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

*  கோவையில் கோல்டுவின்ஸ் - உப்பிலிபாளையம் இடையே ரூ.1,620 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.

*  இலங்கையில் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கண்டனம்.

*  காவிரி காப்பாளன்' என்ற பட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பொருத்தமானவர்.

*  இலங்கையில் உள்ள 18 மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

*  நுண்ணுயிர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

*  அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கான முதல் கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும்.

*  தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

*  அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது.

*  இந்த இடஒதுக்கீட்டால் 435 மாணவர்கள் இந்தாண்டில் பயனடைந்தது மனமகிழ்ச்சி அளிக்கிறது.

* அம்மா மினி கிளினிக் அமைத்த முதல்வருக்கு பாராட்டுகள்.

* மூன்றில் ஒரு பங்கு வருவாய் கிராமங்களில் வரும் மார்ச் 31க்குள் ‛பாரத் நெட்' திட்டம் செயல்படுத்தப்படும்.

*  எஞ்சிய கிராமங்களில் நவ.,30ம் தேதிக்குள் பாரத் நெட் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.

*  கீழடி அகழ்வாராய்ச்சியில் சங்ககால பண்பாட்டின் செழுமையான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

*  விவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

*  ரேஷன்கார்டுகளுக்கு பருப்பு, பாமாயில், சர்க்கரை வழங்க ரூ.5,402 கோடி கூடுதல் மானியத்தை அரசு ஏற்றது.

*  சொத்து ஆவணங்களை அடமானம் வைத்து பத்திரங்களை இணையவழியில் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படும்.

click me!