அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தால் கதிகலங்கிய எடப்பாடி -  அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை...

 
Published : May 17, 2017, 06:38 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தால் கதிகலங்கிய எடப்பாடி -  அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை...

சுருக்கம்

chief minister edappadi palanichami consulting with ministers in admk office

தோப்பு வெங்கடாசலம் தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ரகசிய ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னாள் சுற்றுசூழல் துறை அமைச்சரும் மேட்டூர் எம்.எல்.ஏவுமான தோப்பு வெங்கடாசலம் தலைமையில், 11 எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் ரகசிய ஆலோசனை நடத்தினர்.

இதில் கூவத்தூரில் அளித்த வாக்குறுதியை எடப்பாடி அரசு செய்ய தவறி விட்டதாக எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால் கட்சி உடைந்து ஆட்சி கையை விட்டு போய் விடுமோ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கதி கலங்கி நிற்கிறார்.

இதையடுத்து தற்போது ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் சில எம்.பிக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!