
சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்கியதற்காக முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மையை எரித்து டிடிவி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது.
அதில், இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையத்தில் இருந்து மீட்பது, பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் ரத்து, டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு டிடிவி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
சென்னை தாம்பரத்தில் முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், வத்தலகுண்டில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.