அவ்வளவு சீக்கிரம் விட்டுடமாட்டேன்..! வேட்புமனுவை பரிசீலனை செய்யுங்க..! லக்கானியிடம் விஷால் நேரில் முறையீடு...! 

 
Published : Dec 06, 2017, 04:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
அவ்வளவு சீக்கிரம் விட்டுடமாட்டேன்..! வேட்புமனுவை பரிசீலனை செய்யுங்க..! லக்கானியிடம் விஷால் நேரில் முறையீடு...! 

சுருக்கம்

Chief Election Officer Rajesh Lakhani has been appealed by actor Vishal Manu for his candidacy for contesting elections in RKNagar.

ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நடிகர் விஷால் மனு அளித்து முறையீடு செய்துள்ளார். 

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட நடிகர் விஷால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும் என்று கூறி தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர் சேரன் உள்ளிட் பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தயாரிப்பாளர்  சங்க தேர்தலில் விஷால் போட்டியிட்டு வெற்றி பெற்று 8 மாதங்கள் ஆகியும் இது வரை எந்த நன்மையையும் செய்யாத நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், விஷால் போட்டியிட வேண்டுமா? என சேரன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஷால், வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துக்கள் உள்ளதாகவும், சொத்து கணக்கு விவரங்கள் முறையாக குறிப்பிட்டதாலும் அவருடைய மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. 

இதையடுத்து தண்டையார் பேட்டை சென்ற விஷால் தமது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது முறையாக தேர்தல் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்திய விஷால் தகுந்த வீடியோ ஆதாரமும், ஆடியோ ஆதாரமும் இருப்பதாக தெரிவித்தார். 

இந்நிலையில், மிரட்டப்பட்டதாக கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோவை நடிகர் விஷால் வெளியிட்டார். இதையடுத்து ஆதாரத்தின் அடிப்படையில் விஷாலின்  வேட்பு மனு ஏற்கப்பட்டது. 

ஆனால் சில மணிநேரங்களில் மீண்டும் வேட்புமனுவை நிராகரித்து அதிகாரப்பூர்வமாக தேர்தல் அலுவலர் வேலுசாமி தெரிவித்தார். 

இதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிடுவேன் எனவும் சட்ட ரீதியாக நடவடிக்கையில் இறங்குவேன் எனவும் விஷால் தெரிவித்திருந்தார். 

அதன்படி ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நடிகர் விஷால் மனு அளித்து முறையீடு செய்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!