
சசிகலா, ஓ.பி.எஸ். தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் சைதி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இரட்டை இலைச் சின்னத்திற்கு சசிகலா, ஓ.பி.எஸ். தரப்பு சொந்தம் கொண்டாடியதை அடுத்து பிரச்சனைக்குத் தீர்வு காண தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையில் டெல்லியில் இன்று விசாரணை நடைபெற்றது.
காலை முதல் மாலை வரை சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இவ்விசாரணையில் சசிகலா, ஓ.பி.எஸ்., தரப்பினர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் நாளையுடன் முடிவடைவதால் தேர்தல் ஆணையம் இன்றே தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதில் இரு தரப்பு வாதகங்கள் முக்கிய அம்சங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.