இரட்டை இலையுடன் நாளை வேட்புமனு தாக்கல் - டிடிவி.தினகரன் கூல் பேட்டி... 

Asianet News Tamil  
Published : Mar 22, 2017, 06:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
இரட்டை இலையுடன் நாளை வேட்புமனு தாக்கல் - டிடிவி.தினகரன் கூல் பேட்டி... 

சுருக்கம்

Nominations close tomorrow with a double leaf - titivitinakaran Cool Interview

இரட்டை இலை சின்னத்துடன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதற்கான விடையை தேர்தல் ஆணையம் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமை ஆணையர் நசீம் ஜைதி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் சென்னையில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்துடன் நாளை வேட்புமனு தாக்கல் செய்யப் வோவதாகவும், நாளை மாலை முதல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட இருப்பதாகவும் தினகரன் அப்போது கூறினார்.  

PREV
click me!

Recommended Stories

விஜய் செய்தது ஏத்துக்கவே முடியாத குற்றம்.! முதல் நாளே முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்த வேல்முருகன்.!
CM Vijay Speech: காலி கஜானா, 10 லட்சம் கோடி கடன்.. ஆனாலும் முதல் பேச்சிலேயே தெறிக்கவிட்ட CM விஜய்..!