வெங்காயம் சாப்பிடாமா அவர் அவகோடாவா சாப்பிடுவார் ? நிர்மலா சீத்தாராமனை வெளுத்து வாங்கிய சிதம்பரம் !!

By Selvanayagam PFirst Published Dec 5, 2019, 10:48 PM IST
Highlights

தான்  அதிகம் வெங்காயம் சாப்பிடுவது இல்லை என தெரிவித்த நிமி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன அவகோட்டாவா (வெண்ணைய் பழம்) சாப்பிடுவார் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

நாடாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது தேசியவாத கட்சி தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியை சேர்ந்த எம்.பி.யுமான சுப்ரியா சுலே நாட்டில் நிலவிவரும் வெங்காய விலை உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

அப்போது , எகிப்து நாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதை நான் வரவேற்கிறேன். ஆனால், நான் எகிப்து வெங்காயம் உண்பதில் மகிழ்ச்சியடையவில்லை. இந்தியா அங்கிருந்து ஏன் இறக்குமதி செய்யவேண்டும்? நாம் நமது விவசாயிகளை பாதுகாக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார். 

இதையடுத்து பேசிய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் பேசத் தொடங்கியபோது ஒரு நாடாளுமன்ற  உறுப்பினர் எழுந்து,  ’நீங்கள் எகிப்து வெங்காயங்களை சாப்பிடுவீர்களா?’ என சத்தமாக கேள்வி எழுப்பினார். 

அதற்கு  பதிலளித்த நிர்மலா சீதாராமன், 'நான் பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிகம் சாப்பிடமாட்டேன். ஆகையால் கவலையில்லை. வெங்காயம் ஒரு விஷயம் இல்லை என்ற நிலையில் உள்ள குடும்பத்தில் இருந்து நான் வந்துள்ளேன்’ என தெரிவித்தார். அமைச்சரின் பேச்சு நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை எழுப்பியது.

அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் பேச்சுக்கு பதில் அளித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்ற  கூட்டத்தின் போது பேசிய  நிர்மலா சீதாராமன் தான் வெங்காயத்தை சாப்பிடமாட்டேன் எனவும் மேலும், அது பற்றி கவலை இல்லை எனவும் கூறியுள்ளார். 

அவர் வெங்காயம் சாப்பிடவில்லை என்றால் என்ன சாப்பிடுவார்? அவகோடாவா?  என கிண்டல் செய்தார். நான் ஒன்றும் நிதி அமைச்சரை கிண்டல் அடிக்கவில்லை. நான் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளேன். வெங்காயத்தை தற்போது இறக்குமதி செய்வதால் என்ன பயன்? எப்போது வெங்காயம் இந்தியாவுக்கு வரும்? மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை முன்னதாகவே திட்டமிட்டு எடுத்திருக்க வேண்டும் என கடுமையாக குற்றம்சாட்டினார்.

click me!