நீங்க என்ன சாப்பிடுறேன்னு நாட்டுக்கு சொல்லவா நிதியமைச்சர் ஆனீங்க... ராகுல் காந்தி கேட்ட அதிரடி கேள்வி!

By Asianet TamilFirst Published Dec 5, 2019, 9:38 PM IST
Highlights

 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பொருளாதார துறையை திறமை வாய்ந்தவர்கள் கையாண்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 10 - 15 ஆண்டுளாக மிகப் பெரிய பொருளாதார வலிமை கட்டமைக்கப்பட்டது. ஆனால், அந்தப் பொருளாதார வலிமை அழிக்கப்பட்டு வருகிறது. 
 

நிதியமைச்சரின் வேலை தான் என்ன சாப்பிடுகிறேன் என்பதை   நாட்டுக்கு சொல்வதல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேர்க வந்துள்ளார். முக்கம் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பொருளாதார துறையை திறமை வாய்ந்தவர்கள் கையாண்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 10 - 15 ஆண்டுளாக மிகப் பெரிய பொருளாதார வலிமை கட்டமைக்கப்பட்டது. ஆனால், அந்தப் பொருளாதார வலிமை அழிக்கப்பட்டு வருகிறது. 


வெங்காய விலை உயர்வை நிதி அமைச்சரிடம் கேட்டால், திமிருடன் தான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை என்கிறார். நிதியமைச்சரின் வேலை என்ன? தான் என்ன சாப்பிடுகிறேன் என்பதை இந்தியாவுக்கு சொல்வதல்ல நிதியமைச்சரின் வேலை. உண்மையிலேயே நிலவரம் என்னவென்றால், நடக்கும் பிரச்னைகள் குறித்த எந்தப் புரிதலுமே இல்லை. அடிப்படையில் நிர்மலா சீதாராமன் திறமையற்றவர்.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வெங்காய விலை குறித்து நேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நான் அதிகமாக வெங்காயத்தையோ பூண்டையோ சாப்பிடுவதில்லை. வெங்காயம், பூண்டு பற்றி அதிகம் அக்கறை கொள்ளாத ஒரு குடும்ப பழக்கத்திலிருந்து நான் வந்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

click me!