சிதம்பரம் கோயில் பிரச்சனையில் பொய்யான தகவலை பரபரப்பியதாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, கவுசிக் சுப்ரமணியன் ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி சிதம்பம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக நிர்வாகி மீது புகார்
தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக பாஜக பல்வேறு புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் தினந்தோறும் கூறிவருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவும் கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளது. மேலும் காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்திலும் பாஜக நிர்வாகிகள் மீது புகார்களை அளித்துள்ளது. அந்த வகையில் பொய்யான தகவலை பரப்பிய பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார்.
சிதம்பரம் கோயில் சர்ச்சை
மேலும் சு.வெங்கடேசனை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனர் செய்திருந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக எஸ்.ஜி.சூர்யா மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்த எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியே வந்தார். இந்தநிலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் தகவலை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எஸ்.ஜி.சூர்யாவுக்கு சம்மன்.?
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீட்சிதர்களை தாக்கி பூணூலை அறுத்ததாக போலி செய்தியை பரப்பி சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டதாக புகார் வந்ததையடுத்து போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையை சேர்ந்த கவுசிக் சுப்ரமணியன் என்பவருக்கு சிதம்பரம் போலீசார் சம்மன் அளித்துள்ள நிலையில், பாஜக மாநில செயலாலர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு சம்மன் அளிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடகா சென்றால் மீண்டும் தமிழகம் வர விட மாட்டோம்..! எச்சரிக்கும் அண்ணாமலை