
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்துடன் சிறையில் தள்ளப்படுவார் என பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2ஜி ஊழல் வழக்கில் NDTV இணை நிறுவனர் பிரணாய் ராய் தான் முதல் குற்றவாளி என தெரிவித்தார்.
இந்த வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இரண்டாவது குற்றவாளி என்றும் எச்.ராஜா தெரிவித்தார்.
பிரணாய் ராயின் கூட்டாளிதான் இந்த சிதம்பரம் என்றும் அவர் கூறினார்.
கறுப்புப் பண விவகாரத்தில் ப.சிதம்பரம் தனது குடும்பத்தினருடன் விரைவில் சிறைக்கு செல்வார் என்றும் எச்.ராஜா தெரிவித்தார்.
வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக NDTV இணை நிறுவனர் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 4 இடங்களில் நேற்று சிபிஐ அதிரடியாக ரெய்டு நடத்திய நிலையில் எச்.ராஜாவின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.