செஸ் போஸ்டர் விவகாரம்.. மோடிக்கு அவமரியாதை.. தமிழர்களுக்கு அவமானம்.. ஸ்டாலின் அரசு மீது சீமான் ஆவேச அட்டாக்!

By Asianet Tamil  |  First Published Jul 31, 2022, 8:50 PM IST

தமிழக அரசு பிரதமரை அழைத்துவிட்டு அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், அது இங்கிருக்கும் இத்தனை கோடி தமிழக மக்களுக்கும் ஏற்பட்ட அவமானம் இல்லையா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் சட்ட விதிகளை மீறி மின் கோபுரங்கள் கட்டுமானத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியா ரூ. 110 லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறது. தமிழகத்துக்கு மட்டும் ரூ. 7 லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறது. இந்தக் கடன் சதவீத உயர்வுதான் ஆட்சியாளர்கள் காட்டுகிற, கட்டமைக்க நினைக்கிற வளரச்சி ஆகும். தமிழகத்தில் 10 ஆயிரம் அரசுப் பள்ளிக்கூடங்கள் இடியும் நிலையில் உள்ளன. இப்பள்ளிகள் சீரமைக்க முடியாத நிலையில் உள்ளன. 

இதையும் படிங்க: நீங்க யார் பக்கம்? எடப்பாடி Vs ஓபிஎஸ்.. சசிகலா சொன்ன அந்த பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகிகள் !

Tap to resize

Latest Videos

அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களிடம் நன்கொடை பெற்று பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த அவர்களிடமே ஊதியம் பெற்றுக் கொள்ள சொல்வீர்களா? இவ்வளவு சிக்கல் தமிழகத்தில் இருக்கும் போது ரூ. 80 கோடிக்கு கடலுக்குள் பேனா வைக்கிறேன் என்று கூறுவது சரியா? சமாதி வைத்ததே அதிகம். எனவே தேவை இல்லாத ஆட்டமெல்லாம் காட்டக் கூடாது. மக்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது. ஆட்சியை நடத்துங்கள். செஸ் போட்டி வந்துவிட்டது. அடுத்து கடலோரத்தில் நடக்கிற கைப்பந்து போட்டிக்கு முதல்வர் அனுமதி கேட்கிறார். பின்னர் புலிகளை காப்பதற்கான கருத்தரங்கு நடத்த அனுமதி கேட்டுள்ளார். 

இதையும் படிங்க: ஹிட்லர் அமைச்சர்கள் போலவே இந்தியாவிலும் பொய் சொல்லும் அமைச்சர்கள்.. சென்னையில் பொளந்துகட்டிய சித்தராமையா!

இதிலேயே வண்டி ஓட்டிவிடலாம் என்று முதல்வர் நினைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் வருவதாக கூறினாரா? அல்லது தமிழக அரசு சென்று அவரை அழைத்ததா? தமிழக அரசுதானே அழைத்தது.  ஃபேஸ்புக்கில் பிரதமரை விமர்சித்து எழுதக் கூடாது என்று தமிழக அரசு கூறுகிறது. ஒன்று பிரதமரை ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கக் கூடாது. அழைத்தால் அவருக்குரிய மரியாதை கொடுத்திருக்க வேண்டும். பிரதமருடைய படங்களை இடம்பெற செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் கூப்பிடாமலேயே இருந்திருக்க வேண்டும். இதேபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் நடத்தினார். அவர் பிரதமரையெல்லாம் அழைக்கவில்லை. சிறந்த வீரர்கள் எல்லாம் அப்போது வந்து கலந்துகொண்டனர். 

தமிழக அரசு பிரதமரை அழைத்துவிட்டு அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், அது இங்கிருக்கும் இத்தனை கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் இல்லையா? எதிரியாக இருந்தாலும் வரசொல்லிவிட்டால் பண்பாட்டோடு நடத்தி அனுப்ப வேண்டும். அதுதான் முறை. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று சீமான் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் - இபிஎஸ் அழைப்பு.. செம ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்!

click me!