#BREAKING சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட 5 பேர் டிஜிபியாக பதவி உயர்வு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.!

Published : Oct 18, 2021, 03:54 PM IST
#BREAKING சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட 5 பேர் டிஜிபியாக பதவி உயர்வு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.!

சுருக்கம்

 ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றமும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு பெறுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றமும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகர காவல் ஆணையராக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இருப்பினும் அவர் சென்னை காவல் ஆணையராக பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.கே.விஸ்வநாதன் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக தொடர்வார். டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஆபாஷ் குமார், டி.வி.ரவிசந்திரன், சீமா அகர்வால் ஆகியோர் தங்கள் துறையில் தொடருவார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்