தியாக சீலர் நபிகள் நாயகம்.. திமுகவுக்கு எப்போதும் இஸ்லாமியர்கள் மீது பாசம் உண்டு. மனம் திறந்த ஸ்டாலின்.

Published : Oct 18, 2021, 03:24 PM ISTUpdated : Oct 18, 2021, 03:29 PM IST
தியாக சீலர் நபிகள் நாயகம்.. திமுகவுக்கு எப்போதும் இஸ்லாமியர்கள் மீது பாசம் உண்டு. மனம் திறந்த ஸ்டாலின்.

சுருக்கம்

நபிகள் நாயகம் அவர்கள் இளம் பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்.ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். 

தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள்  'மீலாதுன் நபி' திருநாளில்  வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான 'மீலாதுன் நபி' திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்குத் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதையும் படியுங்கள்:  தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

நபிகள் நாயகம் அவர்கள் இளம் பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர். ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை  அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது போதனைகளும் அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள். 

இதையும் படியுங்கள்: விஜயபாஸ்கர் வீட்டு வாசலில் பரபரப்பு.. போலீசுடன் மோதிய அதிமுக வழக்கறிஞர் அணி.. அசைக்க முடியாது என சவால்.

அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மக்களால் அமையபெற்ற கழக அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த  பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு  மீண்டும் எனது  மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்