வசமாக சிக்கினாரா விஜய பாஸ்கர்.?? கூடுதலாக 5 இடங்களில் சோதனை.. அலறும் அதிமுக தொண்டர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Oct 18, 2021, 3:54 PM IST
Highlights

இந்தநிலையில் தற்போது அந்த எண்ணிக்கையானது 48 இடங்கள் ஆக அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் மேலும் 1 இடத்திலும், மதுரையில் 2 இடங்களிலும், திருச்சியில் 1 இடத்திலும் புதுக்கோட்டையில் 1 இடத்திலும் கூடுதலாக சோதனை செய்யப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மேலும் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 43 இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது சோதனை  இடங்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இது அதிமுக மற்றும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக  அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரக வந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரின் வீடு, மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில் அவர் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

அதேபோல புதுக்கோட்டை காவல் நிலையத்தில் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி மீதும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என மொத்தம் 43 இடங்களில் சிதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்துள்ளது. அதில், 2016 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து கடந்த மார்ச் 31ம் தேதி வரை 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22, 56, 736 ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அமைச்சராக இருந்தபோது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பெயரில் 58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி  குவித்துள்ளார் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. வருமானவரித்துறை கணக்கின்படி 5 ஆண்டில் சி.விஜயபாஸ்கரின் வருமானம் 58.65 கோடி  என கணக்கிடப்பட்டுள்ளது, ஐந்து ஆண்டுகளில் வங்கி கடன், காப்பீடு தொகை என 34.5 கோடி செலவு செய்துள்ளார். அப்படியெனில் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யாவும் ஐந்து ஆண்டுகளில் செலவு போக ரூபாய் 24 கோடி மட்டுமே சேர்ந்து இருக்க முடியும், ஆனால் வருமானத்தை மீறி 27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக கூறி விஜயபாஸ்கர், மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்ஐஆர் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை முதல் 43 இடங்களில் சொதனை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக மேலும் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையை விரிவுபடுத்திள்ளனர். 

இதையும் படியுங்கள்:  தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

இதையும் படியுங்கள்: அடி தூள்.. மாணவர்களுக்கு இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு என்ன இருக்க முடியும். வீட்டுக்கே வரபோகும் ஆசிரியர்கள்

இந்தநிலையில் தற்போது அந்த எண்ணிக்கையானது 48 இடங்கள் ஆக அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் மேலும் 1 இடத்திலும், மதுரையில் 2 இடங்களிலும், திருச்சியில் 1 இடத்திலும் புதுக்கோட்டையில் 1 இடத்திலும் கூடுதலாக சோதனை செய்யப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மொத்தம் சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. சோதனை விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சோதனை இடங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டிருப்பது அத்திமுக மற்றும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோதனை இடங்களில் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் விஜயபாஸ்கர் வசமாக சிக்கியிருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. 
 

click me!