உங்களுக்கு 48 மணிநேரம் தான் டைம்! திமுக வட்டச் செயலாளரை வெளியேற்ற நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

By vinoth kumar  |  First Published Sep 2, 2023, 11:13 AM IST

சென்னை தியாகராயநகர் அப்துல் அஜீஸ் தெருவை சேர்ந்தவர் கிரிஜா. இவருக்கு சொந்தமான வீட்டில் ராமலிங்கம் என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் திமுக வட்டச் செயலாளராக உள்ளார். வீட்டின் உரிமையாளர் கிரிஜா ராமலிங்கத்திடம் வீட்டை காலி செய்யுமாறு கூறிவந்துள்ளார். 


வாடகை வீட்டை 13 ஆண்டுகளாக காலி செய்ய மறுக்கும் சென்னை திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கத்தை 48 மணி நேரத்துக்குள் வீட்டை விட்டு வெளியேற்ற மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை தியாகராயநகர் அப்துல் அஜீஸ் தெருவை சேர்ந்தவர் கிரிஜா. இவருக்கு சொந்தமான வீட்டில் ராமலிங்கம் என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் திமுக வட்டச் செயலாளராக உள்ளார். வீட்டின் உரிமையாளர் கிரிஜா ராமலிங்கத்திடம் வீட்டை காலி செய்யுமாறு கூறிவந்துள்ளார். ஆனால், வீட்டை காலி செய்ய மறுத்து வந்துள்ளார். இதையடுத்து கிரிஜா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராமலிங்கம் தாக்கல் செய்த மனுக்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வீட்டை காலி செய்ய மறுத்ததால, ராமலிங்கத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கிரிஜா தாக்கல் செய்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை.. எப்போதில் இருந்து தெரியுமா?

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆளும் கட்சியில் வட்டச் செயலராக இருக்கும் ராமலிங்கம் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். 64 வயதான என்னை மிரட்டுகிறார். 13 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேற்ற முடியவில்லை. 2017-ம் ஆண்டில் இருந்து வாடகை தரவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கில் கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதிக்குள் வீட்டை காலி செய்து மனுதாரரிடம் சாவியை ஒப்படைப்பதாகவும், வாடகை பாக்கியையும் கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் கூறியபடி நடக்கவில்லை.

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா? இதோ லிஸ்ட்.!

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் நீதிமன்ற உத்தரவை, ராமலிங்கம் தொடர்ந்து அவமதிக்கிறார். போதிய எண்ணிக்கையில் போலீசார் கொண்டு தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை மாநகர காவல் ஆணையர் அகற்ற வேண்டும். பின் வீட்டை கிரிஜாவிடம் ஒப்படைத்து 4-ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும். இந்த உத்தரவு குறித்து சென்னை காவல் ஆணையருக்கு தொலைபேசி அல்லது இ-மெயில் மூலம் அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

click me!