ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என அனைத்து வாக்காளர்களிடமும் சத்திய பிரமாணம்.. உத்தரவிட மறுத்தது நீதி மன்றம்.

Published : Mar 02, 2021, 04:16 PM ISTUpdated : Mar 02, 2021, 04:52 PM IST
ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என அனைத்து வாக்காளர்களிடமும் சத்திய பிரமாணம்.. உத்தரவிட மறுத்தது நீதி மன்றம்.

சுருக்கம்

ஓட்டுக்கு பணம் பெற வில்லை என சத்திய பிரமாணம் பெற உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சூரியா பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என அனைத்து வாக்காளர்களிடமும் சத்திய பிரமாணம் பெற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என நீதி மன்றம் மறுத்துள்ளது.  தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம், ஓட்டுக்கு பணம் பெற வில்லை என சத்திய பிரமாணம் பெற உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சூரியா பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்பதால், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அது நீதிமன்றத்தின் பணியல்ல எனவும்,  இதுசம்பந்தமாக மனுதாரர் அரசை அணுகலாம் எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்