முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் அதிரடி!!

 
Published : Jun 05, 2017, 04:10 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் அதிரடி!!

சுருக்கம்

chennai HC stops penalty for aranganayagam

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1991 – 1996  ஆம்  ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலகட்டத்தில் அமைச்சராக பதவி வகித்த செ. அரங்கநாயகம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.15  கோடி சொத்து சேர்த்ததாக அரங்கநாயகம், அவரது  மனைவி மற்றும் 2 மகன்கள் மேல் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 21 ஆண்டுகள் கழித்து கடந்த ஏ.ப் 17 ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஊழல்தடுப்பு நீதிமன்றம் ஏ.ப் 17 ல் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 50,000  அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தது.

மேலும் இந்த வழக்கில் அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது உள்ள குற்றம் நிருபிக்கபடாததால் அவர்கள் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அரங்கநாயகம் சார்பில் தண்டனையில் இருந்து விடுவிக்க கோரி மேல் முறையீடு செய்ய மனுத தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு  சம்பந்தமாக விரைந்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மேலும் 4 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஏற்கனவே விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனயை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!