சோறு வேணாம்... தீர்வு வேணுமுங்க அய்யா... ட்விட்டரில் ட்ரெண்டாகும் #திமுக_நாடகக்கம்பெனி

By Thiraviaraj RMFirst Published Nov 11, 2021, 10:57 AM IST
Highlights

இந்த 50 ஆண்டுகளில் ஆட்சிகள், கட்சிகள் மாறினாலும், மழை நேரக் காட்சிகள் மட்டும் மாறவே இல்லை. 

50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்து கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் ஆண்டுக்காண்டு மழைநீர் வடிகால் என மகத்தான திட்டங்களை வரிப்பணத்தில் பெருஞ்செலவில் செய்து என்ன பயன்? உண்மையிலேயே மாநகராட்சியில் மழைநீர் வடிகால் திட்டங்கள் பெருஞ்செலவில் செய்யப்பட்டதா? அல்லது வெறும் கணக்கிற்கு கட்டப்பட்டதா? என்ற ஐயம் பலருக்கு எழுகிறது.

அல்டிமேட் கலாய் https://t.co/eXVE2o6hKD

— kartheesh jegan (@kartheeshjegan)

 

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என பலரும் முதலமைச்சராக பதவியேற்றபோதும் இந்த 50 ஆண்டுகளில் ஆட்சிகள், கட்சிகள் மாறினாலும், மழை நேரக் காட்சிகள் மட்டும் மாறவே இல்லை. 

pic.twitter.com/AZj0z4bcCr

— Mayilsamy (@Mayilsa00038911)

 

பெருமழை பெய்யும்போதெல்லாம் இவர்கள் மக்களை சந்தித்து புகைப்படம் எடுத்து போட்டுக் கொள்கிறார்களே தவிர, எதிர்கட்சியாக இருக்கும்போது புகார் சொல்கிறார்களே தவிர, நிரந்தர தீர்வுக்கு வழிகாட்டுவதாக தெரியவில்லை. புகைப்படங்களை எடுத்து பப்ளிசிட்டி தேடிக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதில்லை. 

என்ன தம்பி போட்டோ எடுத்தவுடனே கிளம்புறீங்க.
1 மணி நேரம் இருந்துட்டு சரிபண்ணிட்டு போங்க.

(டைம் ஆச்சு தாத்தா கிளம்புறேன் டிவிட்டர்ல போடனும்).... pic.twitter.com/90Y0uj9mVi

— MuKesh M (@MuKeshM_)

 

இந்த மழைக்கு ஆளும்கட்சி, எதிர்கட்சி, பாஜக உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மழை வெள்ளத்தை பார்வையிட்டு தங்களை ஃபோகஸ் செய்ய பெரும் அக்கறை காட்டினர். இதில் சில புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும்  வெளியாகி அவர்களின்  மற்றொரு பக்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறன. அந்த புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறன.

வெள்ளத்தைப் பார்வையிட சாமியான பந்தல்..😀 pic.twitter.com/4I2uVDYZG1

— MuKesh M (@MuKeshM_)

 

இந்நிலையில், மு.க.ஸ்டாலின், மக்களை சென்று சந்தித்தபோது வீடுகளில் கயிறு கட்டிய புகைப்படமும், உபயோகப்படாத பம்ப் செட் புகைப்படம், சாமியானா பந்தல் போட்டு பார்வையிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இதனை பாஜக தகவல் தொழில்நுட்ப அணியினர் #திமுக_நாடகக்கம்பெனி என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றன.  

*2015 ஆண்டு சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது வந்தது போல் இந்த முறை ஏன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs) வெளியே வரவில்லை..??*

*ஊரறிந்த ரகசியத்தை சொல்கிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி.. pic.twitter.com/RSd5i8r58b

— பிரகாஷ்/प्रकाश/Prakash (@prakash06852232)

That's why we call them - https://t.co/R5QFdjncd3

— டேவிஸ் 🇮🇳 (@itzdvs)

 

click me!