#BREAKING தூக்கியடிக்கப்பட்ட பிரகாஷ்.. புதிய மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்.. ஸ்டாலின் அதிரடி.!

By vinoth kumarFirst Published May 9, 2021, 3:09 PM IST
Highlights

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு வேளாண்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு வேளாண்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. புதிய அரசு அமைந்தால் பழைய அரசின் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. தமிழக முதல்வரின் தனி செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டனர். அதுபோல் தமிழக தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, சென்னையில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னை மாநகராட்சி  ஆணையராக இருந்த பிரகாஷ் மீது சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையண்பு பிறப்பித்த உத்தரவில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ககன் தீப் சிங் பேடி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தற்போது தமிழக வேளாண் துறை முதன்மை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!