8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு... வேதனையில் வெதும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Published : May 09, 2021, 01:05 PM IST
8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு... வேதனையில் வெதும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

மதுரையைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா தொற்றால் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா தொற்றால் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அனுப்பான்டி சுகாதார நிலையத்தில் மருத்துவரான சண்முகப்பிரியா பணியாற்றி வந்தார். 8 கர்ப்பிணியாக இருந்தாலும் சண்முகப்பிரியா வழக்கம்போல் இந்த நெருக்கடியான கொரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவு மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்;- மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்களப்பணி வீரராக - அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரும்பணி ஆற்றிய இளம் மருத்துவரை இழந்திருப்பது ஆழ்ந்த வேதனை தருகிறது.

மருத்துவர்கள் மற்றும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் முன்களப்பணி வீரர்களாக நிற்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்திட அறிவுறுத்தி இருக்கிறேன். மருத்துவர் சண்முகப்பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?