
திருவொற்றியூரில் திமுக முன்னாள் எம்எல்ஏ கொரோனா வைரஸ் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் தொகுதி 1996ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக டி.சி.விஜயன் தேர்வு செய்யப்பட்டார் பின்னர்,. 2011ம் ஆண்டு திருவொற்றியூர் நகர மன்றத் தலைவராகவும் பணியாற்றியவர். திமுகவில் நகர துணைத் செயலாளர், திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக டி.சி.விஜயனுக்கு திடீர்உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பின்னர், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மறைந்த டி.சி.விஜயனுக்கு மனைவி, ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.