சென்னை கொரோனா நோயாளிகளை திருச்சியில் அடைக்க முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Jun 9, 2020, 10:26 AM IST
Highlights

சென்னையில் பெருகி வரும் கொரோனா நோயாளிகளை, திருச்சி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள, வண்ணாரப்பேட்டை குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னையில் பெருகி வரும் கொரோனா நோயாளிகளை, திருச்சி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள, வண்ணாரப்பேட்டை குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 
உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின் படி, இதுவரை 35 இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக, 71 இலட்சத்து 98 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 4 இலட்சத்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்தும் விளங்குகின்றது. இதுவரை அமெரிக்காவில் 20 இலட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 இலட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக பிரேஸில், ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,66,598 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 466 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை  1 லட்சத்து 29,215 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் பெருகி வரும் கொரோனா நோயாளிகளை, திருச்சி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள, வண்ணாரப்பேட்டை குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, திருச்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட, 384 வீடுகள் கொண்ட குடிசை மாற்றுவாரிய வீடுகளை திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் என ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!