தீராத காதல் .!! என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.! கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை ஒப்பன் டாக்.!

By T BalamurukanFirst Published Jun 9, 2020, 10:10 AM IST
Highlights

என் அப்பா..' நான் அமெரிக்கா போவதற்கு அவருடைய ஒரு வருடம் சம்பளத்தை செலவிட்டார். அதன் பிறகுதான் நான் அமெரிக்கா வந்து சேர்ந்தேன். என் வீட்டிற்கு போன் பேச வேண்டும் என்றால் அப்போது ஒரு டாலர் வேண்டும். அந்த ஒரு டாலர் பணம் கூட இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன்.

என் அப்பா..' நான் அமெரிக்கா போவதற்கு அவருடைய ஒரு வருடம் சம்பளத்தை செலவிட்டார். அதன் பிறகுதான் நான் அமெரிக்கா வந்து சேர்ந்தேன். என் வீட்டிற்கு போன் பேச வேண்டும் என்றால் அப்போது ஒரு டாலர் வேண்டும். அந்த ஒரு டாலர் பணம் கூட இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன்.அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தான் நான் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறேன் என்று தான் கடந்து வந்த பாதையை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார் கூகுள் நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் இருக்கும் தமிழரான சுந்தர்பிச்சை. ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கு பின்னால் அர்த்தமுள்ள முள்பாதை இருந்திருக்கிறது என்பதற்கு இவரைப்போல் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை இப்போது கூகுளில் பெரிய பதவியில் இருந்தாலும், தன்னுடைய ஆரம்பகாலத்தில், விமான டிக்கெட்டிற்கு தன்னுடைய ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார் என்ற தகவலை தற்போது அவர் கூறி இருப்பது எல்லோருக்கும் உடல் சிரிக்க வைத்துள்ளது.

உலகின் பல சாதனையாளர்களின் வெற்றிக்கதைகளை அவர்கள் மூலமாகவே கொண்டு சேர்க்கும் முயற்சியில் யூடியூப் நிறுவனம் இறங்கியுள்ளது.இதற்காக Dear Class of 2020 என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை யூடியூப் நடத்தி வருகிறது. இதன் மூலம் பல சாதனையாளர்கள் தங்களது வெற்றிக்கதைகளை யூடியூபில் பேசி வருகின்றனர்.அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்தவரும், கூகுள் சிஇஓ வுமான சுந்தர் பிச்சை அதில் பேசியுள்ளார். 

அதில் "இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் பல விஷயங்களை குறிப்பிட்டார்.குறிப்பாக தான் முதல் முறையாக அமெரிக்கா வந்தது குறித்து பேசினார். அதில், 27 வருடங்களுக்கு முன்பு நான் படிப்பதற்காக அமெரிக்கா வந்தேன்.நான் அமெரிக்கா வருவதற்கான விமான டிக்கெட்டிற்காக என் தந்தை கிட்டத்தட்ட அவரின் ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார்.அமெரிக்கா மிகுந்த செலவு மிகுந்த நாடு. நான் வீட்டிற்கு ஒரு நிமிடம் போன் பேச வேண்டுமென்றால் 2 டாலர்களுக்கு மேல் செலவாகும்.நான் அந்த நிலையில் இருந்துதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா காதல் தான் காரணம்" என கூறியுள்ளார்.

சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை, அதன் பின் சென்னை ஐஐடியில் பயின்றவர். கடந்த 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இவர் பெரும் பங்கு வகித்தார்.இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பெபட்டின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக சேர்ந்து, தற்போது அதற்கும் சி.இ.ஓ-வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!