துக்ளக் பத்திரிகையின் பெயரை மாற்றுங்க.. ஆடிட்டர் குரு மூர்த்திக்கு எதிராக கொதிக்கும் இந்திய தேசிய லீக்.

By Ezhilarasan BabuFirst Published May 24, 2022, 1:06 PM IST
Highlights

ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக கொண்டு நடத்தப்படும் துக்ளக் பத்திரிகை பெயரை உடனே மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக கொண்டு நடத்தப்படும் துக்ளக் பத்திரிகை பெயரை உடனே மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-துக்ளக் என்பது முகலாய மன்னர்கள் வம்சத்தின் பெயர்கள் ஆகும், உதரணமாக 1)முகமது பின் துக்ளக் 1325–1351
2)பெரோஷா துக்ளக் 1351–1388
3)கியாசுதீன் துக்ளக் ஷா 1388–1389
4)அபுபக்கர் ஷா துக்ளக் 1389–1390
5)முகமது ஷா துக்ளக் 1390–1394


6)அலாவூதீன் சிக்கந்தர் ஷா 1394
7)சுல்தான் நசீர் உத்தீன் மகமது ஷா துக்ளக் 1394–1412/1413
8)சுல்தான் உத்தீன் நுஸ்ரத் ஷா, 1394–1398 தில்லி
9)நசீர் உத்தீன் ஷா துக்ளக் 1394–1398 10)பெரோஷாபாத்
துக்ளக் சுல்தானகத்தின், கிழக்கில் பெரோஷாபாத் மற்றும் தில்லியை தலைநகராகக் கொண்டு இரண்டு துக்ளக் சுல்தான்கள் ஆட்சி செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து முஸ்லிம்களை குறிவைத்து துக்ளக் இதழில் கட்டுரைகள் வருகின்ற உதரணமாக சொல்ல வேண்டும் என்றால் கொரோன நோயை பரப்பியது தப்லீக் ஜமாஅத் அமைப்பினர் என ஆடிட்டர் குருமூர்த்தி கட்டுரை எழுதி இருக்கிறார்.ஆர்எஸ்எஸ் பாஜக சனாதன கொள்கைகளை தனது துக்ளக் இதழில் கட்டுரைகளாகவும் துணுக்கு செய்தியாகவும் வெளியிட்டு வருவதுடன் தொடர்ந்து முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரமும் செய்து வருகிறார். 

இஸ்லாமிய மன்னர்களின் பெயரை பயன்படுத்தி வெளிவரும் துக்ளக் இதழ் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுவதை பார்த்தால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை திசை திருப்புகிறார் என்பது புலப்படுகிறது.ஆகவே துக்ளக் என்கிற பெயரை உடனே மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!