மத்திய அமைச்சரைவயில் விரைவில் அதிரடி மாற்றம்? மாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி

By Selvanayagam PFirst Published Oct 3, 2019, 11:04 PM IST
Highlights

2வதுமுறையாகப் பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு விரைவில் அமைச்சரவையை மாற்றியமைக்க உள்ளதாக் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது
 

மக்களவைத் ேதர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாக பொறுப்பேற்றது. மத்திய அமைச்சர்களாக மொத்தம் 58 பேர் பதவி வகித்து வருகின்றனர். அவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் மற்றவர்கள் இணையமைச்சர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையை முதல்முறையாக மாற்றி அமைக்க இருப்தாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த முறை ஆட்சியில் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபுவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது, ஆட்டமொபைல் துறையில் விற்பனைக் குறைவு, முக்கிய துறைகள் உற்பத்தி சரிவு போன்றவற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலையை போக்க மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

இந்த நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தொழில் மற்றும் வர்த்தகத்துறையை சுரேஷ் பிரபு வசம் ஒப்படைக்க பிரதமர் மோடி விரும்புவதாக தெரிகிறது.  இதுபோலவே நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத் போன்றவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம்.

 மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் மறைவுக்கு பிறகு ஊடகங்களில் உரையாற்றவும், அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கவும் ரவிசங்கர் பிரசாத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படலாம். வேறு சிலர் மத்திய அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

click me!