ப. சிதம்பரத்தை சிறையில் தள்ள காரணமான இந்திராணி முகர்ஜிக்கு விவாகரத்து... சிறையில் இருந்தபடி கணவரை பிரிந்தார்!

Published : Oct 03, 2019, 10:27 PM IST
ப. சிதம்பரத்தை சிறையில் தள்ள காரணமான இந்திராணி முகர்ஜிக்கு விவாகரத்து... சிறையில் இருந்தபடி கணவரை பிரிந்தார்!

சுருக்கம்

2015 முதல் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது  சிறையில் உள்ளனர். இருவரும் சிறையில் இருந்த நிலையில் இந்திராணி முகர்ஜி தனது கணவர் பீட்டர் முகர்ஜியிடமிருந்து விவகாரத்து கோரி சென்ற ஆண்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கி சிறைக்கு செல்ல முக்கிய காரணமான இந்திராணி முகர்ஜி - பீட்டர் தம்பதிக்கு குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து அளித்து தீர்ப்பளித்துள்ளது. 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறியவர்கள் இந்திராணி முகர்ஜி. இவரும் கணவர் பீட்டர் முகர்ஜியும் மகள் ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இவர்கள் இருவருக்கும் 2002-ல் திருமணம் நடைபெற்றது. 2015 முதல் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது  சிறையில் உள்ளனர். இருவரும் சிறையில் இருந்த நிலையில் இந்திராணி முகர்ஜி தனது கணவர் பீட்டர் முகர்ஜியிடமிருந்து விவகாரத்து கோரி சென்ற ஆண்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இருபரும் பரஸ்பர விருப்பத்தின்படி  பிரிய விரும்புவதாக தெரிவித்திருந்தனர். மேலும் சொத்துகளை இருவரும் பிரித்துகொள்வது தொடர்பாகவும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இருவருக்கும் விவகாரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறினார். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையிலேயே ப. சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் சிபிஐ விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டனர். இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அடிப்படையில்தான் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

திரும்பத் திரும்ப அவமானம்..! பாஜக சவகாசமே வேண்டாம்..! ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு..!
உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி