மத்திய அமைச்சர் பதவி..! வைத்தியலிங்கத்திற்கு எடப்பாடி அதிதீவிர லாபி..! ஏன் தெரியுமா..?

By Selva KathirFirst Published May 30, 2019, 10:21 AM IST
Highlights

மத்திய அமைச்சர் பதவி விவகாரத்தில் ஒரத்தநாடு வைத்தியத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிதீவிரமாக லாபி செய்து வருவது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் பதவி விவகாரத்தில் ஒரத்தநாடு வைத்தியத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிதீவிரமாக லாபி செய்து வருவது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மக்களவைத் தொகுதிகள் வெற்றி பெற்ற தனது மகன் ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சரவையில் இடம் பெறச் செய்ய பன்னீர்செல்வம் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கவும் பாஜக தயாராக உள்ளது. இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் வைத்தியலிங்கத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து பாஜகவிற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

தமிழகத்தைப் பொருத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது அம்மாநிலத்திற்கு ஒரே ஒரு மத்திய அமைச்சர் பதவி என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதனால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஒரத்தநாடு வைத்தியலிங்கம் ஆகிய இருவருக்குமே மத்திய அமைச்சர் பதவியை கொடுக்க முடியாத சூழல் பாஜகவில் நிலவுகிறது. இதனை சுட்டிக் காட்டிய பிறகும் கூட வைத்தியலிங்கத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தே ஆகவேண்டும் என்று எடப்பாடி தரப்பிலிருந்து பாஜகவிற்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது.

கட்சிகள் மிகவும் சீனியர் மற்றும் நாடாளுமன்றத்தில் தற்போது எம்.பி.யாக இருக்கும் அதிமுகவினரை மிக முக்கிய நிர்வாகி என்கிற காரணங்களை காட்டி வைத்தியலிங்க இதற்கு மத்திய அமைச்சர் பதவியை கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தனக்கு நெருக்கமான எத்தனையோ நிர்வாகிகள் கொங்கு மண்டலத்தில் இருக்கும் நிலையில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி லாபி செய்வதற்கான உண்மையான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் அணிவகுக்க கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது. தேனி நாடாளுமன்ற தொகுதி வெற்றி மற்றும் மோடியுடனான நெருக்கம் ஆகிய காரணங்களால் பன்னீர்செல்வத்திற்கு கட்சிக்குள் அதிலும் குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செல்வாக்கு அதிகரித்தது. தினகரன் தரப்பில் இருந்தும் பலர் எடப்பாடியின் தொடர்பு கொள்ளாமல் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர். 

இந்த சூழலில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சர் ஆகாமல் தடுத்தால் கட்சிக்குள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் தான் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கத்தின் மூலமாக ஓபிஎஸின் திடீர் வளர்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி செக் வைக்க முயற்சிப்பதாக பேசப்படுகிறது.

click me!