இதுக்குத்தான் அவரோட சாதி என்னன்னு கேட்டேன் !! கிருஷ்ணசாமி அதிரடி விளக்கம் !!

By Selvanayagam PFirst Published May 30, 2019, 9:51 AM IST
Highlights

குறிப்பிட்ட இந்த சாதிக்காரர்கள் உங்களுக்கு ஓட்டுப் போட்டார்களா ? என நிருபர் தொடர்ந்து குதர்க்கமான கேள்வி கேட்டதால், அவரை அடையாளம் காட்டவே அவர் எந்த ஊர் ? என்ன சாதி ? என தாம் கேள்வி கேட்டதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்து புதிய தமிழகம் கட்சி போட்டியிட்டது. தென்காசி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி திமுக வேட்பாளர் தனுஷிடம் தோல்வி அடைந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டாக்டர் கிருஷ்ணசாமி, சாதி அடையாளத்திலிருந்த வெளியேற வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். மேலும் பட்டியல் சாதியில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை நீக்க வேண்டும் என்றும், பட்டியலினத்துக்கு வழங்கப்படும் சலுகைகளை தங்கள் சாதிக்கு வேண்டாம் என்றும் போராடி வருகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசுவதற்காக,  டாக்டர் கிருஷ்ணசாமி  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கும் கிருஷ்ணசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, ஒருகட்டத்தில் குறிப்பிட்ட ஒரு நிருபரைப் பார்த்து `நீ எந்த ஊரு.. எந்த சாதி' எனக் கேட்டார்.

இது ஊடகத் துறையிலும், பொது வெளியிலும் பெரும் சலசலசப்பை ஏற்படுத்தியது.  அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கிருஷ்ணசாமியின் இந்தப் பேச்சக்கு கண்டனம் தெரிவித்தனர். தற்போது இது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் அந்த நிருபரிடம், நீ எந்த ஊர் ? என்ன சாதி ? என்று ஏன் கேள்வி எழுப்பினேன் என்பது குறித்து கிருஷ்ணசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிரஸ் மீட்டிற்கு அழைப்பு விடுத்தாக அவர் தெரிவித்தார்.

அந்த சந்திப்பில்  ஒருகாலத்துல குறிப்பிட்ட சமூகத்து மக்கள் மட்டுமே எனக்கு ஓட்டு போட்டு வந்தார்கள் . ஆனால் தற்போது அப்படி இல்லை. அனைத்து தரப்பினரும் எனக்கு வாக்களித்துள்ளனர். முன்பெல்லாம் உயர் வகுப்பினர் வாழும் பகுதிக்குள் வாக்கு கேட்டுக் கூட போக முடியாது. இந்த தேர்தலில் அந்தப் பகுதிக்கெல்லாம் தன்னால் போக முடிந்தது என்று நிருபர்களிடம் பேசியதாக தெரிவித்தார்.

ஆனால் குறிப்பிட்ட அந்த நிருபர், , குதர்க்கமா கேள்வி கேட்டு பரபரப்பை உருவாக்க வேண்டும் என்று  திட்டமிட்டே கேள்வி கேட்டார் என கிருஷ்ணசாமி கூறினார்.

அந்த நிருபர் இரண்டு சாதிகளின் பெயரைக் குறிப்பிட்டு `அந்த மக்கள் எல்லாம்  உங்களுக்கு ஓட்டு போட்டார்களா என அநாகரீகமாக கேள்வி எழுப்பினார்.

அப்படிக் கேட்ட நிருபரை அடையாளம் காட்ட வேண்டும் என நினைச்சுதான் நான் அந்தக் கேள்வியைக் கேட்டேன் என கிருஷ்ணசாமி விளக்கம் அளித்தார். ஆனால் அதை திசை திருப்பும் வகையில் இந்த, இந்த  சாதிக்காரர் மட்டும்தான் பிரஸ் மீட்டுக்கு வரணும்'னு நீங்க அறிவிச்சிடுங்க'னு கூச்சல் போட்டு அவர் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் என தெரிவித்தார்.

ரெண்டு சாதிகளுக்கிடையே மோதலைத் தூண்டி விடற வேலை இது என்பது தான் என்னுடைய கருத்து என தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி , தவிர்க்க முடியாத சூழல்ல அப்படியொரு கேள்வியைக் கேட்க வேண்டி வந்தது என தெரிவித்தார்.

click me!