உலக அளவில் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு..!! மருத்துவ கட்டமைப்பில் வலிமையாக இருக்கிறது இந்தியா..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 30, 2020, 7:21 PM IST
Highlights

 2.34 சதவீதம் நோயாளிகளை ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .  எனவே இதை சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிக சொற்பம் .  

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில்  மிகக்  குறைந்த அளவிலானவர்களுக்கு  மட்டுமே  வென்டிலேட்டர் பயன்படுத்தப்படுவதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் தெரிவித்துள்ளார் .  நோயில் பாதிக்கப்படுபவர்களில் வெறும் 0.33 சதவீதம்பேர் மட்டுமே வெட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர் என அவர் கூறியுள்ளார் .  இது மற்ற நாடுகளை காட்டிலும் மிக மிகக் குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் . இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரையில் 33 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தி 79 ஆக உயர்ந்துள்ளது .  நாட்டிலேயே அதிக அளவில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு உள்ளது . 

டெல்லி குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன ,  இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறி இருக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது, எனவேதான் டெல்லி மும்பை சென்னை போன்ற நகரங்களில் கட்டுக்கடங்காமல் வைரஸ் தொற்று பரவி வருகிறது . இந்நிலையில்  வைரஸால் பாதிக்கப்பட்ட 33 ஆயிரம் பேரில் சுமார் 8 ஆயிரத்து 437 பேர் சிகிச்சை பெற்று இந்தியாவில் குணமடைந்துள்ளனர் . சுமார் 23 ஆயிரத்து 546 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் ,  ஆனால் இதுவரையில் ஒருவர் கூட வென்டிலேட்டர் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . இந்நிலையில் இந்தியாவில் சுமார் 80 சதவீதம் பேருக்கு  லேசான அளவிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

  

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உலக அளவில் தொற்று நோய்களின் தீவிரத்தை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து உள்ளது ,  அதாவது சர்வதேச சுகாதார விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதி முக்கிய திறன்களை இந்தியா பெற்றுள்ளன .  இதன் மூலம் கொரோனா வைரசை  மற்ற நாடுகளை காட்டிலும்  எளிதாக சமாளித்து வருகிறோம் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளில் வெறும் 0.33 சதவீதம் நோயாளிகளே வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளனர் ,  ஆக்சிஜன் ஆதரவில் வெரும் 1.5% நோயாளிகளே உள்ளனர் .  2.34 சதவீதம் நோயாளிகளை ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .  எனவே இதை சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிக சொற்பம் .

 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக நோய் தாக்கம் அதிகரித்துள்ளது,  கடந்த மூன்று நாட்களில் 11.3 நாட்களாக உயர்ந்துள்ளது,  உலக அளவில் இறப்பு விகிதம் 7% ஆக இருந்தாலும் இந்தியாவில் இறப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளது. தற்போது நாளொன்றுக்கு 60,000 சோதனைகள் , 16,000 மாதிரி  சேகரிப்பு மையங்கள் , நாடு முழுவதும் 400க்கும் அதிகமான ஆய்வகங்கள்,  என மருத்துவ கட்டமைப்பில் இந்தியா வலிமையாக உள்ளது என தெரிவித்துள்ள அவர் ,  எந்த சவாலையும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார். 

 

click me!