மத்திய அரசுதான் விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்க வேண்டாம் என்றது... சேகர்பாபு விளக்கம்..!

Published : Sep 04, 2021, 12:55 PM IST
மத்திய அரசுதான் விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்க வேண்டாம் என்றது... சேகர்பாபு விளக்கம்..!

சுருக்கம்

மத்திய அரசுதான் விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்க வேண்டாம் என்றது என சட்டப் பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.  

மத்திய அரசுதான் விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்க வேண்டாம் என்றது என சட்டப் பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, "விநாயகர் சதுர்த்தி நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும்", என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "மத்திய அரசு உள்துறை செயலாளர் அஜய் பல்லா,  கொரோனா மூன்றாம் நிலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்த தடை விதிக்க வலியுறுத்தி இருக்கிறார். அதன் அடிப்படையில் தான் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தடை விதித்திருக்கிறது.

நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த பரிசீலனை செய்யப்படும். அதேபோல, உங்கள் கோரிக்கை அனைத்தையுமே நிறைவேற்றி கொடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளர்’’என  தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி
தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S