ரெய்டில் பறிமுதல் செய்த சாவி.. எஸ்.பி வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

By vinoth kumarFirst Published Sep 4, 2021, 12:54 PM IST
Highlights

சென்னையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்புக் குழு, எஸ்.பி வேலுமணி கணக்கு வைத்துள்ள வங்கியில், அவரின் லாக்கரை திறந்து சோதனை நடத்தியுள்ளனர். மேலும் வங்கி அதிகாரிகளிடம், கடைசியாக இந்த லாக்கர் எப்போது திறக்கப்பட்டது? உள்ளிட்ட விபரங்களை விசாரித்துள்ளனர். 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வங்கி லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அரசு ஒப்பந்தபணிகள் வாங்கி தருவதாக கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்ததாக எஸ்.பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி வேலுமணி சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்கள் அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 13 லட்சம் ரூபாய், முக்கிய ஆவணங்கள் மற்றும் சாவி ஒன்றை கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து,  எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்புக் குழு, எஸ்.பி வேலுமணி கணக்கு வைத்துள்ள வங்கியில், அவரின் லாக்கரை திறந்து சோதனை நடத்தியுள்ளனர். மேலும் வங்கி அதிகாரிகளிடம், கடைசியாக இந்த லாக்கர் எப்போது திறக்கப்பட்டது? உள்ளிட்ட விபரங்களை விசாரித்துள்ளனர். 

மேலும், வேலுமணி வங்கி கணக்கு குறித்த ஆவணங்களை பெற்று சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், லாக்கரில் இருந்து ஏதேனும் ஆவணங்கள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? போன்ற விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

click me!